இந்தியா

இந்தியாவின் நிலை மனதை பதறவைக்கிறது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் உருக்கம்!

90views

ந்தியாவில் தற்போதுள்ள சூழ்நிலை மனதை பதறவைக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து உலக சுகாதார நிறுவனம் சார்பில் நேற்றைய தினத்தில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய டெட்ரஸ் அதானோம்’ இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை மனதை பதறவைக்கிறது. எங்களால் முடிந்த எல்லா உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம். இந்தியாவிற்குத் தேவையான உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்

மேலும் அமெரிக்கச் சுகாதார நிறுவனம் ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்களை (ரத்தத்தில் குறைந்த அளவில் ஆக்சிஜன் இருக்கும் நபர்களுக்குப் பயன்படும் கருவி) இந்தியாவிற்கு அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் உலக சுகாதாரத்துறை சார்பாக 2,600 வல்லுநர்கள் இந்தியாவிற்கு வர உள்ளனர். அவர்கள் இந்திய சுகாதாரத்துறையோடு இணைந்து செயல்பட உள்ளனர்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!