தமிழகம்

கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள்!!

132views

மிழகத்தில் கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக்கூட்டத்துக்கு பிறகு அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா கவனிப்பு மையங்களின் எண்ணிக்கையை கடந்த ஆண்டைவிட கூடுதலாக உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் போன்றவற்றை மாவட்ட ஆட்சியர்கள் உரிய முறையை பின்பற்றி பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொற்று ஏற்பட்டவர் உடன் இருப்பவர்களை 72 மணி நேரத்திற்குள் கண்டறிந்து பரிசோதனை செய்ய வேண்டும் என ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தவும், மருந்துகள், பாதுகாப்பு கவசங்கள், ஆக்சிஜன் போன்றவற்றை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா கவனிப்பு மையங்களை பராமரிக்க முதற்கட்டமாக 61 கோடி ரூபாய் நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும், அனைத்து கொரோனா மையங்களையும் ஆட்சியர்கள் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!