சைவம்

பூண்டு சட்டினி !

502views

தேவையான பொருட்கள்

20 பூண்டுப்பற்கள்
5 சின்ன வெங்காயம்
3 காய்ந்த மிளகாய் வற்றல்
1 சிறிய நெல்லிக்காய் அளவு புளி
2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
தேவையானஅளவு உப்பு
1/4 டீஸ்பூன் கடுகு
சிறிதுகருவேப்பிலை

செய்முறை

காய்ந்த மிளகாய் வற்றலை சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும்
பின்பு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பூண்டுப்பற்கள் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்
பின்பு புளி, ஊற வைத்த காய்ந்த மிளகாய் வற்றல் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்கவும்.வதக்கிய பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, கருவேப்பிலை சேர்க்கவும்.சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அரைத்த சட்னியை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி பரிமாறவும்.

இவ்வுளவு சுவையான பூண்டு சட்டினியா இப்படி செஞ்சிப்பாருங்க,

சுவையான பூண்டு சட்டினி தயார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!