தமிழகம்

வேலூர் நறுவி மருத்துவமனையில் 1000 மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்ததாக தலைவர் ஜி.வி.சம்பத் தகவல்

40views
வேலூர் நறுவி மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேலூரில் இயங்கிவரும் தனியார் நறுவி மருத்துவமனையில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறது. மருத்துவமனை துவங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவில் சுமார் 1000 மூற்று மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து உள்ளது.

டாக்டர் வெர்னன் லீ தலைமையில் ஒரு குழு இயங்கிவருகிறது. தற்போது ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.  தற்போது இந்தியா முழுவதும் மற்றும் சில வெளிநாடுகளிலிருந்தும் வரும் நோயாளிகளுக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது , கருத்தரிப்பு மையம், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையும் தொடங்கப்பட உள்ளது என்று அவர் கூறினார்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!