கவிதை

கிராமத்து கோடை ஏரி

29views
காகமோ கரையுதுங்க
கானாங்குருவி கத்துதுங்க
குயில் சத்தம் கேட்குதுங்க
குள்ள முயல் ஓடுதுங்க
கரையோரம் வேப்பமரம்
வேர் தெரிய நிக்குதுங்க
காய்ஞ்ச கருவேலம்
காலைப்பதம் பாக்குதுங்க
ஓங்கி தேய்ந்த ஒத்தையடி
ஒழுங்கா பார்த்து வாங்க
காலை கொஞ்சம் எடரி வச்சா
நெருங்கி முள்ளு குத்தும் அங்க
மஞ்ச தேய்ச்ச பாறை கல்லோ
காஞ்சி போய் கிடக்குதுங்க
முள்ளு புதுர குள்ள
முனி இருக்குன்னு சொல்றாங்க
முடிஞ்சா தொடுங்கடான்னு
முரட்டு புளியமரம்
ஆணி அடிச்சதாலே
அவனவனுக்கும் கொலை பதறும்
பாதுகாப்பு இல்லாம
நெட்டாக வளர்ந்திருக்கு
கோடை வெயில் ஆச்சுதுன்னா
நொங்கு படையல் நமக்கிருக்கு
ஊசி மட்ட மேல
ஓணான் ஒன்னும் முறைக்குதுங்க
என் மரத்த நாடாதன்னு
நஞ்சு சாபம் கொடுக்குதுங்க
மஞ்சள் காய தவிர்த்து கண்
கருப்பு பழத்தை தேடுதுங்க
மாட்டிய சுரட்டு கோலுக்கோ
மல்யுத்தம் நடக்குதுங்க
சாணத்தை உருட்டிக்கிட்டே
வீடு தேடும் வண்டுகள் கூட்டம்
சலசலப்பு சத்தம் எல்லாம்
சாயங்காலம் தான் கேட்கும்
கள்ளி புதருக்குள்ள
பூனர் காசர் சேர்ந்திருக்கு
கோர முளச்சிடுச்சு
வெயிலெல்லாம் பறந்திருக்கு
கோடை கொளுத்திருச்சு
குட்ட மட்டும் மிஞ்சிருக்கு
மீன் எல்லாம் புழுங்கி
மழைக்குத்தான் காத்திருக்கு
ஒத்தக்கால் தூக்கி
நாரை அங்க தவமிருக்கு
மண் பிடிப்பு ஓரத்துல
பால் நண்டு மாண்டிருக்கு
பலர் அந்தரங்கம் பார்த்த
மீனுங்க அழிஞ்சு கிட்டே வருது இங்க
கருமேக வரணுமுன்னு
கடவுளுக்கு மனு போடுதுங்க
– கவிஞர் ஜெயரா

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!