தமிழகம்

வேலூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு உடமை வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

21views
வேலூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட அனைத்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மில்டன் தலைமையில் நடைபெற்றது.
பழைய ஓய்வு ஊதியத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், வாரத்தில்5 நாட்கள் மட்டுமே வேலைநாட்கள் இருக்க வேண்டும், நீண்ட நேரம் பணிபுரிவதற்கான கூடுதல் ஊதியம் இதர சலுகைகளை அறிவிக்கவேண்டும், கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அனைத்து வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!