தமிழகம்

வேலூர் மண்டல பார்வையற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆசிரியர் தினத்தில் 15ம் ஆண்டு முப்பெரும் விழாவில் பாராட்டு விழா

22views
வேலூர் ஆசிரியர் இல்லத்தில் வேலூர், திருவண்ணாமலை. திருப்பத்தூர் இராணிப்பேட்டை மாவட்டத்தின் பார்வையற்றோர் ஆசிரியர் சங்கத்தின் 15ம் ஆண்டு முப்பெரும் விழா நடந்தது.
சங்க தலைவர் கோபால் தலைமை தாங்கினார். செயலாளர் சஃபியுல்லா வரவேற்றார். சங்க அறிமுகத்தை தலைவர் மார்கண்டன் செய்தார். தலைவர் கோபால்தலைமையுரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினராக சென்னை லக்சரி ஹாலிடேஸ் (தமிழ்நாடு சுற்றுலாத்துறை) பொதுமேலாளர் ஐயப்பராஜ், மேலாண்மை இயக்குநர் தமீம் அன்சாரி, காட்பாடி தாலுகா பொன்னை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர் கேசவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இவ்விழாவில் ஆசிரியர் தின விழா 100 சதவீத தேர்ச்சி விழுக்காடு பெற்ற ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. தலைமை ஆசிரியராகப் பணி உயர்வு பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, மற்றும் சங்கத்தின் பொதுக்கூட்டம் நடந்தது. இணைசெயலாளர் முத்தியால் நன்றி கூறினார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!