21views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
மறக்கக் கூடியவனாகவே
இருக்கிறான் மனிதன்…
கொடுக்கும் இறைவன்
கொடை பற்றி அனுதினம்
பாடம் நடத்தினாலும் இறையருளை
மறப்பதிலும் மறுப்பதிலும்
முன்னணியில் இருக்கிறான் மனிதன்…
நீரின்றி உலகில்லை…
ஆக்கவும் காக்கவும்
அழித்தலும் போல்
அத்தனையும் அதுவும் செய்யும்…
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு ஆண்டும்
ஒவ்வொரு பருவத்தும்
ஒரு மாநிலம் குடிநீருக்காக
கையேந்துகிறது
ஒரு மாநிலம் நீர் மறுத்து அடம்பிடிக்கிறது…
ஒழுங்காற்று
வழிகாட்டு ஆணையங்கள்
ஓரிரு அறிவிப்புக்களோடு
காலாவதியாகி விடுகின்றன…
அவசர வழக்குகளுக்கும் ஐந்தாறு வாய்தாக்கள்
வாங்கி விடுகிறார்கள்…
மனிதனுக்கு
வாய் குடிநீர் வாய்க்கு முன்பே
வயல்கள் கருகி விடுகின்றன…
வாழ்க்கை முடிந்து விடுகிறது…
எதில் மறுப்பு இருந்தாலும்
குடிநீர் பிரச்சனையில் எ
வரும் குணம் மாறுவதில்லை…
ஆனால்
அவசியப்படும் வேளைகளில் எல்லாம்
கருநாடகம்
திரைக்குப் பின்
ஒரு நாடகம் போடுகிறது…
கொடுப்பவர்களைத்தான்
இலக்கியம் குறித்து வைத்திருக்கிறது….
இவர்கள் எப்போதும்
தடுத்து வைப்பவர்கள்…
கெடுத்து வைப்பவர்கள்…
எல்லோருக்கும் தேவை குடிநீர்..
இதில் சாதியென்ன
மதமென்ன மொழியென்ன
மாநிலம் என்ன?
எவர் என்றாலும்
கொஞ்சம் கொடுத்து
நெஞ்சம் தடவு…
பஞ்சம் தடுத்து
பசிக்கு உதவு…
இயற்கை கொடுக்கிற போது மட்டும்
தருவேன் என்பது
இறைவன் கொடையை
மறுத்துப் பேசும் செயல்…
தாகிக்கும் மனிதனுக்கு நீர்…
பசிக்கும் மனிதனுக்கு உணவு…
அது கோவிலில் கொட்டும்
ஆயிரம் கோடிகளுக்கும் மேல்…
முதலில் மனிதனை கவனி…
அது இறைவனை கவனிப்பதற்கு சமம்…
add a comment






