27views
மேகமதில் மோகமுடன் வெண்ணிலா
சோகமின்றி ராகமுடன்
பாடல் பாட!
காதலனின் மடியில்
தலைவைத்து ஓராயிரம்
கதை பேச எண்ணி
மங்கை மனம் வாட!
தொலைதூரத் தென்றலில்
அவன் மூச்சுக் காற்றை அவளும் தேட!
அவனின் நினைவுகள்
அவளை காதல் மழையில் நனைக்க!
வானம் முழுதும்
நிரம்பி வழிகிறது
இருவரிடமும் சொல்லாத
காதல் மழை!
கவிதாகுமாரி, தாராபுரம்
add a comment






