தமிழகம்

உடல் உறுப்பு தானம் செய்து ஐந்து பேருக்கு மறுவாழ்வு தந்த காட்பாடி அடுத்த சேர்க்காட்டை சேர்ந்த தொழிலாளி ஞானசேகர்

20views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பெரிய தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி வெல்டிங் வேலை செய்துவருகிறார். இவரது மகன் ஞானசேகர்(24) இவரும் வெல்டிங் வேலை செய்துவந்தார்.
கடந்த 20-ம் தேதி(ஜூன்)20-ம் தேதி இரவு 9.30 வேலை முடித்து விட்டுஇருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பும்போது சாலை விபத்தில் சிக்கினர். வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 21-ம் தேதி மூளைச்சாவு அடைந்தார்.
அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், கல்லீரல் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் வேலூர் சிஎம்சிக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை காமாட்சி நினைவு மருத்துவமனைக்கும் கொடுக்கப்பட்டது.
இவரது தாயார் லட்சுமி தனி நிறுவனத்திலும் வேலை செய்கின்றனர். இவரது தங்கைக்கு திருமணம் ஆகிவிட்டது. தான் மறைந்தும் 5 பேருக்கு வாழ்வு கொடுத்தார் ஞானசேகர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!