தமிழகம்

ஆளுநர் இல.கணேசன் ஐயா அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் : திரைப்பட இயக்குனர் நடிகர் இ. வி. கணேஷ்பாபு

170views
கோபாலபுரமும், கமலாலையமும் நேசிக்கும் ஒரே மனிதர் நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநர் இல.கணேசன்
ஐயா அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
18 ஜுலை 2022 டில்லி இல்லத்திலும், “மலை மந்திர்” கோவிலிலும் திரு. முகுந்தன் அவர்களோடு ஆளுநர் அய்யாவை சந்திக்கிறேன். தஞ்சையில் நான் பதினொன்றாம் வகுப்பு படித்தபோது அவர் தலைமையில் பட்டிமன்றம் பேசியதை மறக்காமல் நினைவு கூறுகிறார்.
மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பு மட்டுமல்லாது கூடுதலாக இன்று மாலை மேற்குவங்க ஆளுநராக பதவி ஏற்கிறேன். கல்கத்தா புறப்படுகிறேன் நீங்களும் வாருங்கள் என்கிறார். முகுந்தன் மற்றும் நண்பர்களோடு புறப்படுகிறோம். ஆளுநராக பதவியேற்ற பத்தாவது நிமிடத்தில் எங்களை அழைத்து மாளிகை விருந்து மண்டபத்தில் தேநீர் விருந்து கொடுக்கிறார். (அன்றைய டில்லி மற்றும் கல்கத்தா புகைப்படங்களையே இங்கே பகிர்ந்திருக்கிறேன்.)

மாற்றுக் கொள்கை உடையவர்களையும் மதிக்கும் பண்பாளர், இலக்கியவாதி. நான் பயின்ற தஞ்சாவூர் வீரராகவ மேல்நிலைப்பள்ளியின்,மாண்புமிகு முன்னாள் மாணவரே சென்று வாருங்கள்.
இ. வி. கணேஷ்பாபு
திரைப்பட இயக்குனர் நடிகர்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!