தமிழகம்

கே.வி.குப்பம் தாலுகாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா!!

197views
வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் தாலுகா, கே வி குப்பம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள், ஜெகன் மூர்த்தி, நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, மண்டல கல்லூரி கல்வி இயக்குநர் (தருமபுரி) முனைவர் ப.சிந்தியா செல்வி, கீ.வ.குப்பம் ஒன்றிய குழு தலைவர் ரவிசந்திரன், ஒன்றியக்குழு துணை தலைவர் பாரதி வெங்கடேசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சீதாராமன், ஜெயாமுருகேசன், விஜயலட்சுமி முருகன். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அசோக்குமார், கீ.வ.குப்பம் கல்லூரி முதல்வர் முனைவர் பி.பிரபுகாந்தன், கீ.வ.குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பலதா சரவணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!