இலக்கியம்

கபிலன்வைரமுத்து எழுதிய அம்பறாத்தூணி சிறுகதைகள் : கதை ஓசை தீபிகா அருண் குரலில் ஒலிவடிவில் வெளியானது : ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் கதை மாந்தர்கள் அறிமுகம்

26views
எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து எழுதி 2020ஆம் வெளிவந்த அம்பறாத்தூணி என்ற சிறுகதைத் தொகுப்பு தற்போது ஒலிப்புத்தகமாக வெளியாகியிருக்கிறது. கதை ஓசை தீபிகா அருண் குரலில் ஸ்டோரி டெல், கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் பாட்காஸ்ட் போன்ற முன்னணி ஒலித் தளங்களில் அம்பறாத்தூணி ஒலிப்புத்தகம் இன்று வெளியானது. சிறுகதைகளில் இடம் பெறும் வெவ்வேறு கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் வண்ணம், முழுக்க முழுக்க ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அறிமுகக் காணொளியைக் கபிலன்வைரமுத்து மற்றும் கதை ஓசை குழு தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்கள்.
வேலூர் சிப்பாய் புரட்சி, பூலித்தேவன் ராணுவ முகாம், லியோ டால்ஸ்டாயின் உதவி பெற்ற அகதிகள் கப்பல், பப்புவா நியூ கினியா நாட்டில் நடைபெற்ற ஆழ்கடல் சுரங்கம், மஞ்சவேலம்பட்டி பாகவத சமீன்தார், முப்பத்தோராம் நூற்றாண்டு பெண் என பல்வேறு வரலாற்று மற்றும் அறிவியல் புனை கதைகளின் கதாபாத்திரங்களை, புரொபைல் மேக்கர் என்ற நிறுவனம், ஜெனரேட்டிவ் ஏ.ஐ மூலம் உருவாக்கியிருக்கிறார்கள். கபிலன்வைரமுத்து எழுதிய அம்பறாத்தூணி சிறுகதைத் தொகுப்பு, அச்சு வடிவில் வெளியானபோது, முதல் மாதத்திலேயே ஆயிரம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!