கவிதை

அழும் குழந்தையின் கதறலில்…

339views
ஈமான்
தாங்கும் இதயத்திற்குள்
போர்
விமானத்தின்
சத்தம்
வெடிகுண்டு
தொடுதலில் நடுங்கி தவழுது
வாழ்வின்
பயம்
ஓயாத
ஓலத்திற்குள் தள்ளி ஓங்கி
தட்டுது
பீரங்கிகளின்
கைகள்
இறந்து
அழும் குழந்தையின் கதறலில்
சிரித்து
பசியாருது
இஸ்ரேல் கழுகுகள்
காசா
கரையில் இரத்த சவங்களை
ஏந்துது
தனிமையின்
கண்ணீர்
புனித
பூமியில் இரத்தத்தின்
பாதங்கள்
கால் இழந்து
தவிக்கிறது பாலஸ்தீனம்
சமாதான
சொல்லில் தீப்பொறிகளின்
பிழைகள்
குழந்தைகளை
எழுதி புள்ளி வைக்கிறது
மரணம்…
கவிஞர் பாக்கி

12 Comments

  1. சலீம் சகியுல்லாஹ் கான், சமூகநீதி படைப்பாளர்கள் சங்கம். says:

    வேடிக்கை பார்க்கும் மனசாட்சியற்ற உலகமே பிணந்தின்னி கழுகுகளின் கூடாகிவிட்டது.
    இஸ்ரேல் எனும் கழுகை வல்லாதிக்க கழுகு பொத்திப் பாதுகாக்க அது உயிருடன் இருப்பவர்களை கொத்தித் தின்கிறது.
    “குழந்தைகளை எழுதி புள்ளி வைக்கிறது மரணம்”
    கடைசி வரி ஆகப்பெரும் வலியின், முற்றுபெறா சோகத்தின் தற்காலிக முற்றுப்புள்ளி.
    .
    தொடரட்டும் உங்கள் எழுத்து
    முடியட்டும் வல்லாதிக்கம்

  2. இது கவிதை அல்ல இது தான் உண்மை அந்த மக்களின் அன்றாட வாழ்வில் நிலையே கவிஞர் அவர் பாணியில் எடுத்துள்ளார்…

  3. Poetry is a gift, and you have truly mastered the art of weaving language into something profound and timeless. Your success is a testament to your dedication, creativity, and passion. Keep inspiring, keep creating, and keep moving hearts with your words.
    Congratulations 👏🎉

  4. அங்கே நடக்கும் அநியாயங்களை கவிதை மூலம் நமக்கு காட்சி தருகிறார் அம்மக்களுக்காக அனைவரும் தூஆ செய்வோம்…

  5. இது போன்ற பல்வேறு படைப்புகளை இன்னும் பல உங்களிடம் எதிர்பார்க்கும் ஆவலுடன் உங்கள் வாசகர்.

  6. கவிதையை படிக்கும் பொழுது மனமே அழிகிறது அப்பாவி மக்கள் கொள்வது தடுக்க முடியாதா

  7. தம்பி அப்துல் பாகிஅவர்களின் – பலஸ்தீன மக்களின் பாதிப்புகள் மற்றும் தவிப்புகள் குறித்த – சுருக்கமான கவிதை உணர்வுபூர்வமாகவும் அடர்த்தியான சொற்களோடும் இருந்தது.

    அவனது வேதனையும், வலியும் நமது கவலையை ஒத்திருக்கிறது .

    இவரை போன்ற படைப்பாளிகள் நிறைய உருவாக வேண்டும் .

    தங்கள் தங்கள் எண்ணங்களை இதயம் சார்ந்தும், இலக்கியம் சார்ந்தும் வெளிப்படுத்த வேண்டும்.

    இறைவன் அவருக்கு இதுபோன்ற சிந்தனை ஆற்றல்களை மென்மேலும் அதிகப்படுத்துவானாக!

    அன்புடன்,

    மு.தமிமுன் அன்சாரி
    தலைவர்,
    மஜக
    02.11.24

    மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அண்ணன் பாக்கியின் கவிதை வரிகளுக்கு சொன்ன
    வாழ்த்து

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!