கவிதை

கவிச்சோலை

200views
மலர் பூத்த வனமதில்
மங்கையவள் மனம்!!
மயக்கும் மாலைப்
பொழுதில்
பெருமகிழ்ச்சிதனைகண்டாளோ?
கையில் ஓர் வீணை!!
இசைப்பதோ ஓர் இனிய ராகம்!!!
மயிலினமே மயக்கம்
கண்டு
ஆடற்கலை தனை மறந்தனவோ?
அழகு மலர்கள் ஆங்கே
தலையாட்டி ரசித்திடவே……
சோலை எங்குமே
சுகம் சுகமே…….
மனம் முழுதுமே
ரீங்காரமே……..
சற்றும் சூழலும்
பார்க்கும் இடமெல்லாம்
ஆனந்தம் ஆனந்தமே!!
இறை தந்த இனிமை
இதே……இதே……
இதமாய் மனம்
மகிழ்ந்திடுதே……
எத்தனை கோடி
இன்பங்கள் வைத்தாய்
எங்கள் இறைவா!!!!!
ஸ்ரீஜீவி

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!