தொலைக்காட்சி

சகோதரர் முக்தார் அவர்களின் MY INDIA 24*7 துவக்க நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பங்கேற்பு

46views
சத்தியம் தொலைக்காட்சியில் பணிபுரிந்த சகோதரர் முக்தார் அவர்கள் ஊடகத்தில் அடுத்த கட்ட நகர்வாக MY INDIA 24*7 என்கிற தொலைக்காட்சியை துவங்கி உள்ளார் அதன் துவக்க நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர் அவர்கள் துணை பொது செயலாளர் முஹம்மது ஷிப்லி அவர்கள் மாநில செயலாளர் அபு பைசல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொலைக்காட்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி, அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் சிறுபான்மை கமிஷன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திமுக டிகேஸ் இளங்கோவன் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர், காங்கிரஸ் கட்சி ஹிதாயத்துல்லாஹ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிஜாமுதீன் மமக அமைப்பு செயலாளர் புழல் சேக் எஸ்டிபிஐ பொது செயலாளர் அச உமர் பாருக் மற்றும் தலைவர்கள் துவங்கி வைத்தனர்.
ஊடகத்தில் பணியாற்றும் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
சமுதாயத்தில் இருந்து இளைஞர்கள் ஊடகத்தில் மிக பெரிய உயரம் தொட வேண்டும் என்பது தான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் அப்படியான விசயத்தில் ஊடகத்தில் அடுத்த கட்டத்தை அடைந்து உள்ள சகோதரர் முக்தார் அவர்கள் ஊடகத்தில் இன்னும் பல உயரத்தை தொட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!