தமிழகம்

உசிலம்பட்டி சந்தை திடலில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கடையின் மேற்கூரையை உடைத்து திருட்டு.போலிசார் விசாரணை.

175views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ளது சந்தை திடல்.இங்கு பூமார்க்கெட் தினசரி சந்தை வாரச்சந்தை செயல்பட்டு வருகின்றன.இங்குள்ள தினசரி சந்தையில் 200க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் மற்றும் மளிகை கடைகள் அமைந்துள்ளது. இதில் மளிகை கடைகளில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் மேற்கூரையை உடைத்து கடையில் இருந்த கல்லாவை உடைத்துள்ளனர்.ஆனால் சில்லரைக் காசுகளைத்தவிர பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு கடையின் மேற்கூரையை உடைத்து திருடி சென்ற திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதே போல் இந்த கடையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 50இ000 திருடிய வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது திருடிய திருடர்களை இதுவரை காவல் துறையினர் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எப்பொழுதும் மக்கள் நடமாடட்டம் காணப்படும் பகுதியில் கடையில் திருடப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!