தமிழகம்

திருமங்கலம் அருகே 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் -ல் மாமிச கழிவுகள் மற்றும் துர்நாற்றத்துடன் கூடிய குப்பை கூளங்களால் கண்மாய் சீரழிந்து வரும் அவல நிலை .

200views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனக்கன்குளம் ஊராட்சியில் உள்ள 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறுகுளம் கண்மாயில் , கடந்த சில மாதங்களாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கொட்டப்படுகின்ற குப்பைகள் மற்றும் மாமிச கழிவுகள் குவியல், குவியலாக கன்மாயில் தூக்கி வீசப்படுவதால், கண்மாயில் உள்ள நீர் மாசடைந்து நோய் தொற்று பரவும் நிலை உருவாகுவதுடன்,
நீர் ஆதாரத்தை அளித்தும், கண்மாயை சீரழித்து வரும் அவல நிலை உருவாகியுள்ளது .மேலும் அவ்வழியே குடியிருப்பு வாசிகள் செல்வதற்கு முடியாமலும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் துர்நாற்றத்துடன் எரிக்கப்படும் குப்பைகளால் புகை மண்டலத்தில் செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கிராம மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகம் , மாவட்ட நிர்வாகம், உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ,
தற்போது பரவி வரும் கொரோனா தொற்றால் பீதி அடைந்த கிராம மக்கள், உடனடியாக இதனை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!