தமிழகம்

உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் தண்ணீர் தேடி மலைப்பகுதியில் இருந்து வெளியேறும் வரும் அரிய வகை மந்தி குரங்குகள். பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

110views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் அழிந்து வரும் அரியவகை இனமான ட மந்தி வகை குரங்குகள் 500க்கும் மேற்பட்டவை அதிகம் காணப்பட்டு வருகிறது.இந்நிலையில் உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் உள்ள மலைப்பகுதிகளில் 100க்கும் மேற்ப்பட்ட மந்தி குரங்குகள் உள்ளன.பொதுவாக மந்தி குரங்குகள்; பயந்த சுபாவம் கொண்டவை. மனிதர்களை கண்டால் ஓடும் மற்றும் பக்கத்தில் வராது.ஆனால் சமத்துவபுரத்தில் மந்தி குரங்குகள் மலையை விட்டு கீழே இறங்கி மலையடிவாராப் பகுதிகளில் மனிதனுக்கு அருகில் உலா வருகின்றன. மலைப் பகுதிகளில் தண்ணீர் கிடைக்காததால் மலையிலிருந்து வெளியேறி சாலையோரங்களில் சுற்றித் திரிவதால் அரிய வகை மந்திக் குரங்குகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக வனத்துறை அதிகாரிகள் அதனை பாதுகாக்கும் விதத்தில் மலை அடிவாரத்தில் தண்ணீர் தொட்டி அமைத்து விலங்குகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் வேறு ஏதேனும் காரணத்திற்காக மலையை விட்டு வெளியேறுகிறதா என்பது குறித்து வனத்துறையினர் ஆராய்ந்து வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். உடனடியாக தமிழக அரசும் வனத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் மந்தி குரங்குகளை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!