தமிழகம்

மதுரை மத்திய சிறையில் ஒரே நாளில் புத்தக தான மையத்தில் 4500க்கும் அதிகமான புத்தகங்கள் பெறப்பட்டுள்ளது

98views
மதுரை மத்தியசிறையில், சிறைவாசிகள் நல்வழிபடுத்தும் வகையிலும் சிறைவாசிகளின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் மதுரை மத்தியசிறையில் பொதுமக்களின் பங்களிப்புடன் கூடிய அதிக நுால்கள் கொண்ட நூலமாக அமைத்திட, புத்தகங்கள் தானமாக பெற புத்தக தான மையம் ஒன்றை சிறை அங்காடியில் சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இந்த மையத்தில் பல்வேறு தன்னார்வளர்கள் ஒன்றினைந்து சுமார் 4540 புத்தகங்கள் இன்று மட்டும் புத்தக தானம் செய்தனர். மேலும் பொது மக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மத்தியசிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறை அங்காடியில் புத்தகங்களை தானமாக வழங்கலாம் எனவும், மேலும் புத்தக தானம் செய்ய விரும்புவோர் 0452-2360034, 0452-2360035 என்ற தொலைபேசி எண் தொடர்பு கொள்ளலாம் எனவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!