தமிழகம்

தண்டவாளத்தில் சிதறி கிடந்த இரு உடல்கள் – ரயில்வே காவல்துறை விசாரணை

146views
மதுரை மாநகர் மேல அனுப்பானடி பகுதியில் உள்ள ரயில்வே தண்டாவளத்தில் இன்று காலை இரு உடல்கள் சிதறி கிடப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நேரில்சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தண்டாவாளத்தில் சிதறிகிடந்த உடல்களை காவல்துறையினர் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ரயில்வே காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இரு நபர்களும் மது அருந்துவதற்காக தண்டாவளத்தில் அமர்ந்திருக்கலாம் எனவும், தண்டாவளத்தில் நள்ளிரவில் நடந்து சென்றபோது ரயில் மோதி இறந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஒருவரை அடையாளம் காணப்பட்டுள்ளது இவர் பெயர் சிவகுமார் அதே பகுதியில் உள்ள அப்பள கம்பெனியில் கூலி வேலை பார்த்து வருவதும் தெரிய வருகிறது மற்றொருவரின் அடையாளம் கண்டறிய முடியவில்லை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!