தமிழகம்

உசிலம்பட்டி அருகே முடிதிருத்துவோர் நல சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

204views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிக்கம்பட்டி கிராமத்தில் முடி திருத்துவோர் நல சங்கத்தினர் சுமார் 72 நபர்களுக்கு கடந்த மாதம் அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த இடத்தை முடி திருத்துவோர் சங்கத்தினர் சீரமைத்து குடிசைகள் அமைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.இந்நிலையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு வீட்டு வரி ரசீது கேட்டு உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.ஆனால் அதிகாரிகள் வீட்டு வரி ரசீது கொடுக்கமால் அலைக்கழித்தாக கூறப்படுகின்றது.இதனால் ஆத்திரமடைந்த முடிதிருத்துவோர் சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பின் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்த அதிகாரிகள் மற்றும் போலிசார் சம்மந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதை; தொடர்ந்து கலைந்து சென்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!