தமிழகம்

பாலமேடு பேரூர் அதிமுக நிர்வாகிகள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

353views
மதுரை மாவட்டம் பாலமேட்டைசேர்ந்த அதிமுக நிர்வாகிகள் அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் அதிமுக மாவட்ட பிரதிநிதி சோ.லெட்சுமணன், அம்மா பேரவை செயலாளர் ராமராஜ், பேரூர் துணை செயலாளர் ஏ.கே. தனசேகரவேல் பாண்டியன், தொடக்கக் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் மணியரசன், மற்றும் ஜவகர் உட்பட 50 க்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு அமைச்சர் கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்றார். இதில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக மாவட்ட அவைத் தலைவர் பாலமேடு எம்.ஆர்.எம். பாலசுப்பிரமணியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர செயலாளர் மனோகரவேல் பாண்டியன், உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் உள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!