தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் இருதரப்பின் இடையே மோதல் – கலவரம் ஏற்படாமல் இருக்க கூடுதலாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

138views
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் நேற்று மாட்டுப்பொங்கல் கொண்டாடியபோது ஜல்லிக்கட்டு மாட்டை மற்றொரு சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு கொண்டு சென்றதால் இருதரப்பின் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதனைத் தொடர்ந்து இன்று காலை இரு சமூகத்தினரும் மோதிக் கொண்டதால் வடுகபட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டன இதனைத் தொடர்ந்து இதுவரையிலும் இரு தரப்பிலும் மொத்தம்.28.பேர்கைது செய்யப்பட்டுள்ளது ஆண்கள் 21. பெண்கள் 7.கூறப்படுகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் சரகம் டிஐஜிஅபிநவ் குமார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார் மேலும் பாதுகாப்பு பணியில் ஏஎஸ்பி.மதுகுமாரி. கூடுதல்கண்காணிப்பாளர்.கார்த்திக். போடி.டிஎஸ்பி சுரேஷ். தேனி டிஎஸ்பி.பார்த்திபன்பெரியகுளம் டிஎஸ்பி கீதா.ஆய்வாளர்கள் மீனாட்சி.சங்கர். ஜெயச்சந்திரன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை வீடு வீடாக தேடிச் சென்று காவல்துறையினர் ஒவ்வொரு நபராக கைது செய்யும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் இதனால் தற்போது கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் கலவரம் ஏற்படாமல் இருக்க கூடுதலாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து வட்டாட்சியர் முகமது சரீப் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளும் உடன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!