தமிழகம்

திருமங்கலம் பகுதியில் உள்ள ஸ்ரீ முனியாண்டி சாமி கோவிலுக்கு ஆயிரக் கணக்கில் குடும்பத்துடன் குவியும் பக்தர்கள் – அதிகாலை அனைத்து பக்தர்களுக்கும் பிரியாணி பிரசாதம் .

525views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எஸ் கோபாலபுரம் ,. அச்சம்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள ஸ்ரீ முனியாண்டிசாமி திருக்கோவிலில் தைப்பொங்கல் திருநாளில் , ஸ்ரீ முனியாண்டி சாமி பெயரில் அசைவ உணவகம் நடத்திவரும் தொழிலதிபர்கள் மற்றும் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட அயல் நாடுகளில் உள்ள அனைவரும் குடும்பத்துடன்,  திருமங்கலம் பகுதியில் உள்ள ஸ்ரீ முனியாண்டி சாமி திருக்கோவிலுக்கு தஞ்சம் அடைவர். இவர்கள் இரண்டு நாட்களாக திருவிழாவில் பங்கு கொண்டு சாமிக்கு மலர் தட்டுக்களுடன் ஊர்வலமாக நகர் வீதியில் வலம் வந்து , கோயிலை அடைந்தபின் அங்கு முனியாண்டி சுவாமிக்கு மலர் அபிஷேகம் செய்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர் .

இதனை தொடர்ந்து அச்சம்பட்டி கிராமத்தில் உள்ள உருவமில்லாத பீடம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ முனியாண்டிசாமி கோவிலில், 500க்கும் மேற்பட்டோர் அவர்கள் பால்குடம் சுமந்து கிராம வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து , சாமிக்கு பாலபிஷேகம் செய்த பின்,மாலையில் அக்கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டாரும் சாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக, தட்டில் மாலை , மலர் பழங்கள் உள்ளாட்டவற்றை எடுத்துக்கொண்டு ,கிராமத்தைச் சுற்றி ஊர்வலமாக ஒன்றிணைந்து கோவிலில் வந்தடைந்து சுவாமிக்கு அபிஷேகம் நடத்தினர். மேலும்
100 ஆடுகள், 1500 கிலோ அரிசி கொண்டு பிரியாணி சமைத்து , அதிகாலை ஆறு மணி அளவில் அங்கு கூடும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி மகிழ்தனர். இங்கு சமைத்து பிரியாணியை பாக்கெட்டுகள் மற்றும் பாத்திரங்களில் அடக்கி வைத்து, அங்கு காலையிலிருந்து வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இப்பிரியாணி பிரசாதத்தை உண்டால், உடலில் நோய் நொடிகள் நீங்கும் என ஐதீகம் கூறப்படுகிறது.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!