தமிழகம்

தென்னையில் கொறித்துண்ணிகள் கட்டுப்பாடு – குள்ளபுரம் வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம்

74views
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் பெரியகுளம் தாலுகா குள்ளபுரம் வேளாண் கல்லூரி மாணவர்கள் தென்னையில் கொறித்துண்ணிகள் கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். தென்னையில் தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் அலுமினியத்தகடு வைத்து கட்டிவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கொறித்துண்ணிகள் மரம் ஏறுவது தடுக்கப்பட்டு ,மகசூலும் அதிகரிக்கும். இப்பயிற்சி விவசாயிகளுக்கு திருப்தி அளித்ததாக மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இச்செயல்முறை விளக்கத்தை குள்ளபுரம் வேளாண் கல்லூரி மாணவர்களான சக்திவேல், நந்தகுமார், காளிராஜன், ஆல்பின்சாபு, மோகன் ,சிவனேசன் , மூவேந்திரன், கார்த்திகேயன், மணிக்கிருஷ்ணா, ராஜா, கோகுல் மற்றும் விஜய்ஆனந்த் ஆகியோர் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!