தமிழகம்

அடுத்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டை இரு தரப்பினர் ஒன்றிணைந்து அவனியாபுரம் கிராம மக்கள் கமிட்டி என்று நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

132views
மதுரை அவனியாபுரம் பகுதியில் ஒவ்வொரு வருடமும் தைத்திருநாள் “தைப்பொங்கல்” அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக அவனியாபுரம் தென்காள் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டி இடையே இரண்டு வருடங்களுக்கு மேல் கருத்து வேறுபாடு உள்ளதால் இரண்டு வருடங்களாக ஜல்லிக் கட்டு விழாவை அரசே எடுத்து நடத்தியது.

இந்த வருடம் 2023 ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முன்பு நடைபெற்ற அமைதி கூட்டத்தில் இருதரப்பினர் இடையே சமரசம் தோல்வியடைந்தது. இந்த நிலையில் அனைத்துக் கட்சியினர் ஒன்று சேர்ந்து அவனியாபுரம் கிராம கமிட்டி மற்றும் தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் இருவரையும் ஒன்றிணைத்து அடுத்த ஆண்டு அவனியாபுரம் கிராம மக்கள் கமிட்டி என்று நடத்த வேண்டும் என்று முடிவு செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது இதில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!