தமிழகம்

திருப்பரங்குன்றம் சிந்தாமணி அருகே 3500 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல். அரிசி கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் பறிமுதல் செய்த கீரைத்துறை போலீஸார்

126views
மதுரை மாநகர் தெற்குவாசல் காவல் சரகத்திற்குட்பட்ட கீரைத்துறை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மேல அனுப்பானடி ராஜமான் நகரில் ரேசன் அரிசி பதுக்கி இருப்பதாக போலீஸாருக்கு வந்த தகவலையடுத்து.  கீரைத்துறை போலீஸார் மேல அனுப்பானடி ராஜமான் நகரில் உள்ள ரைஸ்மில் குடோனில் சட்டத்திற்கு புறம்பாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3500 கிலோ ரேசன் அரிசி மூடைகளையும் பதுக்கி வைத்திருந்த நபர்களையும் தெற்குவாசல் உதவி ஆணையர் சண்முகம் தலைமையிலான தனிப்படை பிடித்தனர்.
ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட காமராஜபுரத்தைச் சேர்ந்த  கிருஷ்ணமூர்த்தி,  சந்தப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக்குமார்,  சுந்தரபாண்டி, மற்றும் வெள்ளைச்சாமி  ஆகியோர்களையும் மேற்படி கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசி மூடைக மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தி வாகனத்தையும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை (CSCID) போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.  குடிமை பொருள் குற்றபுலானாய்வு துறை போலீஸார் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!