தமிழகம்

வேலூரில் ஜாக்டோ – ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

79views
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும், அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டைகளையவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ஜோஷி தலைமை தாங்கினார். உயர்மட்ட குழு உறுப்பினர் பாபு வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், செல்வக்குமார், சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்மட்ட குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் துவக்க உரையாற்றினார். உயர்மட்டக்குழு உறுப்பினர் முகமதுஷாநவாஸ் சிறப்புரையாற்றினார். 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் அஜிஸ் குமார் நன்றி கூறினார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!