தமிழகம்

மதுரை மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குனர் அர்ஜுன் குமார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு

294views
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் ரேண்டம் என் அடிப்படையில் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் விமானத்தில் வரும் பயணிகளிடம் கொரோனா ஒப்புதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு அவர்களின் முகவரி மற்றும் காய்ச்சல், சளி தன்மை பதிவு செய்யப்பட்டு உள்ளது.
12 வயதுக்குட்பட்ட  பயணிகளிடம் காய்ச்சல் சளி தொந்தரவுகள் இருந்தால் பரிசோதனை செய்யப்படுவார்கள் மேலும் அவர்களுக்கு கொரோன தடுப்பூசியுடன் பூஸ்டர் டோஸ் ஊசியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக கவசம், அணியவும் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை கொரோனா தொற்று குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயனிகளிடம் கொரோனா தொற்று பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் இன்று முதல் கொரோனா தொற்று பரிசோதனை நடைபெற்று வருகிறது .இது குறித்து ஆய்வு செய்ய வந்த மதுரை மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குனர் Dr. அர்ஜுன் குமார் மதுரை விமான நிலையத்தில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு செய்து செய்தியாளர்களை சந்தித்தார்.
இன்று முதல் மதுரை சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.   துபாய், சிங்கபூர், இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் ரேண்டம் அடிப்படையில் பரிசோதனைகள் நடைபெறுகிறது. இன்று துபாயில் இருந்து வந்த பயணிகள் நான்கு பேருக்கு பரிசோதனைகள் நடைபெற்றது மேலும் விமானத்தில் வந்த பயணிகள் அனைவரிடமும் கொரான ஒப்புதல் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு அவர்களின் முகவரி மற்றும் காய்ச்சல், சளி,ஆகியவை குறித்து தகவல் பெறப்பட்டுள்ளது.
ரேண்டம் எண் பரிசோதனை அடிப்படையில் பரிசோதிக்கப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதியானால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு குறிப்பாக சிவகங்கை புதுக்கோட்டை தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் வந்து இருந்தால் அந்த பயணிகளின் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு தகவல் அனுப்பிட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்.
12 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுவதில்லை. 12 வயதுக்கு கீழ் பட்டவர்களுக்கு காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் கொரோனா தடுப்பூசி இரண்டு கண்டிப்பாக அணிந்து இருக்க வேண்டும் இல்லை என்றால் கொரோனா சான்று இல்லை என ஒப்புதல் சான்று பெற்றிருக்க வேண்டும்.
12 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பு செய்தல் கண்டிப்பாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக பொதுமக்கள் கூட்டம் உள்ள இடங்களில் கூடுவதை தவிர்க்கவும் பாதுகாப்பாக வலியுறுத்தப்படுகிறது,  என சுகாதாரத்துறை இணை இயக்குனர் Dr. அர்ஜுன் குமார் கூறினார்.  மதுரை விமானத்தில் செய்தியாளர் சந்திப்பில் திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் தனசேகரன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!