தமிழகம்

மதுரையில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் குதிரை பலி

208views
மதுரை புது ஜெயில் ரோடு, மஹபூப் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையில் சில குதிரை மற்றும் கோவேரி கழுதைகள் கேட்பாடற்ற முறையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிதிரிந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று இரவு காளவாசல் பகுதியில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் சாலையில் குறுக்கே வந்த குதிரை மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் குதிரை பலியான நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கு படுக்காயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தொடர்ந்து போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குதிரைகள் மற்றும் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் பொருட்டு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!