தமிழகம்

மதுரை முத்துப்பட்டி கண்மாயை ஒட்டியுள்ள கோயில், நீர்நிலை ஆக்கிரமிப்பு காரணமாக இடிக்க வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

159views
மதுரை முத்துப்பட்டி பகுதியில் உள்ள கன்மாயை ஒட்டியுள்ள இடத்தில் 50 வருடங்களுக்கு மேலாக விநாயகர் கோவிலும், 15 வருடங்களுக்கு மேலாக அங்காள ஈஸ்வரி கோயிலும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உத்தரவிட்டுள்ளதால் அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று இந்த கோயில்களை இடிக்க வந்ததை அடுத்து முத்துப்பட்டி பகுதியில் உள்ள பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருக்கோயிலை இடிப்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து அவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை ஒட்டி அமைதியாக கலைந்து சென்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!