தமிழகம்

பேரா அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்

162views
ராமநாதபுரம் மாவட்ட திமுக., சார்பில் பேராசிரியர் பெருந்தகை அன்பழகன் நூற்றாண்டு விழா நிறைவு பொதுக்கூட்டம் பாரதி நகர் பேருந்து நிலையம் முன் நடந்தது.  ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்சாமுத்து ராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் கொ. கருப்பையா, க.ஆதித்தன், சுஜாதா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.  மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே பிரவின் வரவேற்றார்.

தலைமை கழக பேச்சாளர் நடிகர் வாசு விக்ரம் சிறப்புரையாற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் மிசா எஸ்.மாரிமுத்து, மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு, மாநில விவசாய அணி துணை செயலாளர் வ.து.ந.ஆனந்த், ராமநாதபுரம் தெற்கு நகர் செயலாளர் டி.ஆர்.பிரவீன் குமார், ராமேஸ்வரம் நகர் செயலாளர் கே.இ.நாசர் கான், மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் வீ. முத்துக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட கவுன்சிலர்
கவிதா கதிரேசன், நன்றி கூறினார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!