தமிழகம்

திமுக அரசு விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர், மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பு எம் எல் ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

119views
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை கிழக்கு மாவட்டம் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு விலைவாசி உயர்வை கண்டித்து கோசங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறுகையில்…
பால் விலை, மின்கட்டண உயர்வு உள்ளிட்டவை உயர்த்திய திமுக அரசை வீழ்த்த காட்டும் வகையில் இன்றைக்கு அதிமுக மதுரை கிழக்கு மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம் செய்து வருகிறோம்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக ஆக்க உள்ளார் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வி.
உதயநிதி ஸ்டாலின் மட்டுமல்ல அந்த குடும்பமே பல்வேறு பொறுப்புகள் இருப்பது நாடு அறிந்த ஒன்று இதனை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
தற்போது இவருக்கு அவசரமாக இந்த பதவியை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன பருவநிலை மாற்றத்தினால் டெல்டா மாவட்டம் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.. மேலும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் திறக்க முடியாத நிலை உள்ளது இந்த நிலையில் உதயநிதிக்கு பதவி வழங்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார்..
உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் சட்ட ஒழுங்கை சீர்படுத்த போகிறாரா..?அல்லது தனது திரைப்படங்களின் மூலம் நல்ல செய்திகளை சொல்லப் போகிறாரா.? எதுவுமே தெரியவில்லை எனக் கூறினார்.
ஸ்டாலினுக்கு உதயநிதி அமைச்சராவதால் நன்மை கிடைக்கலாம். மக்களுக்கு என்ன கிடைக்கும்.! அவர் அமைச்சராவதில் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை எனக் கூறினார்.
திருப்பரங்குன்றத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் செங்கக் கல்லை எடுத்துச் சென்றதால் தான் அதிமுகவில்ந்தது, திமுக ஆட்சிக்கு வந்தது என சொல்கிறார்கள்.
உதயநிதி நாளை பதவி ஏற்றவுடன் தமிழக அரசு நிதியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை உடனடியாக தொடங்குவார் என்றால் அதனை நாங்கள் மகிழ்ச்சியுடன் பார்ப்போம், செங்கலை காட்டியவர் நாளை மருத்துவமனையை காட்டுவாரா என செல்லப்பா கேள்வி எழுப்பினார்.
நாங்கள் மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் முதலில் இரண்டு கட்டிடங்களை கட்டுங்கள் ராமநாதபுரத்தில் படிக்கும் மாணவர்கள் இங்கு படிக்கும் வசதியை ஏற்படுத்துங்கள் என வேண்டுகோள் எடுத்துள்ளோம்.
ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது இது குறித்த கேள்விக்கு.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நடத்த வேண்டும் என விரும்புகிறோம்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு இபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அவர் செல்வாரா என கேள்விக்கு.
அந்த நிகழ்ச்சிக்கு எடப்பாடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை அவருக்கு நிறைய பணிகள் உள்ளது எங்களுக்கு தெரிந்தவரை எடப்பாடி பழனிச்சாமி அந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை எனக் கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!