தமிழகம்

சாயல்குடி, முகுகுளத்தூர் பகுதிகளில் அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் பிறந்த நாள்

95views
மேற்கு மாவட்டம் சாயல்குடி ஒன்றியம், பேரூர் அமமுக சார்பில் மாவட்ட செயலரும், முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான மு.முருகன் ஆணைக்கிணங்க அமமுக பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சாயல்குடி ஒன்றிய செயலர் ஏ.பச்சை கண்ணு தலைமை வகித்தார். சாயல்குடி பேரூர் செயலர் எஸ்.சரிபு முன்னிலை வகித்தார். சாயல்குடி சக்தி மாரியம்மன் கோயிலில் டி.டி.வி.தினகரன் பெயரில் சிறப்பு பூஜை நடந்தது.
முதுகுளத்தூர் வடக்கு, கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள்/ முதுகுளத்தூர் பேரூர் அமமுக சார்பில் டி.டி.தினகரன் பிறந்த விழா நடந்தது. மாவட்ட கழக அவை தலைவர் சிவராமச்சந்திரன்தலைமை வகித்தார்.  முதுகுளத்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முதுகுளத்தூர் ஒன்றிய செயலர்கள் சேதுபதி, முத்துராமலிங்கம், கவுன்சிலர் முருகன், மாவட்ட பொருளாளர் முனியசாமி, மருதுவரணி மாவட்ட செயலர் டாக்டர் பன்னீர்செல்வம் பொதுக்குழு உறுப்பினர் மலைகண்ணன் பேரூர் செயலர் சுந்தரமூர்த்தி, சிறுபான்மை பிரிவு செயலர் லத்தீப் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!