தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பும் முதல்வருக்காக இராஜபாளையத்தில் சாலை விதிகளை மீறி திமுகவினரால் சாலையை மறித்து போடப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட மேடைகள் – சாலையில் செல்ல முதல்வருக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட நிர்வாகம்

220views
தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பும் முதல்வர் ஸ்டாலினுக்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் போக்குவரத்து விதிகளை மீறி சாலைகளை மறித்து 10 இடங்களுக்கு மேல் திமுகவினர் மேடை அமைத்து ஒளி பெருக்கிகள் அமைத்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளனர் இதனால் நகர் முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.  சாலை மார்க்கமாக காரில் செல்லும் தமிழக முதல்வருக்காக ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட நிர்வாகத்தின் செயலால் பொதுமக்கள் அதிருப்தி  சாலை வழியே காரில் செல்லும் முதல்வருக்காக போக்குவரத்து விதிகளை மீறி சாலையை மறித்து போடப்பட்டுள்ள மேடைகளால் பொதுமக்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர் இதனால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொதுமக்கள் அதிர்ச்சியை தொடர்ந்து போக்குவரத்து இடையூறாக போடப்பட்டிருந்த திமுகவினரின் மேடைகளை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.  மேலும் ராஜபாளையத்தில் வந்துதனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்த முதல்வர் ஸ்டாலின் மதுரையில் நாளை நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் பயணம் செய்யும்போது கூட்டத்தை காண்பிப்பதற்காக திமுகவினர் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு பணம் வழங்குவதற்க்கு டோக்கன் வழங்கினர் டோக்கனை வாங்குவதற்க்கு பெண்கள் மற்றும் ஆண்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!