தமிழகம்

ஸாலிஹீன் மருத்துவக் கல்லூரி அறிமுக கூட்டம் நடைபெற்றது

272views
திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே ஸாலிஹீன் அறக்கட்டளையின் சார்பில் அமைய இருக்கும் கிரீன் கார்டன் சிட்டி – ஸாலிஹீன் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அறிமுக கூட்டம் திருச்சி கல்லூரியில் இன்று (26-11-2022) காலை நடைபெற்றது.

அறக்கட்டளையின் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவரும், தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமை வகித்து மெகா திட்டங்கள் குறித்தும், 260 ஏக்கர் நிலம் வாங்கப் பட்டுள்ளது குறித்தும், மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது குறித்தும் விளக்கி கூறினார்.

அறக்கட்டளையின் நிர்வாகக்குழு உறுப்பினரும், அஸ் ஸலாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியின் செயலாளருமான ஆடுதுறை ஷாஜஹான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
MAM பொறியியல் கல்லூரியின் செயலாளரும், அறக்கட்டளை நிர்வாகக்குழு உறுப்பினருமான நிஜாம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் டாக்டர் அபுல்ஹசன் அவர்கள் மருத்துவக் கல்லூரி திட்டம் குறித்து விளக்கினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
அறக்கட்டளை நிர்வாகக்குழு உறுப்பினர் மில்லத் இஸ்மாயில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

திருச்சி சுற்றுப்புற மாவட்டங்களை சார்ந்த பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று இந்த திட்டம் குறித்து தங்களது ஆதரவையும், மகிழ்ச்சியையயும் தெரிவித்தனர்.
அறக்கட்டளை செயல் அலுவலர் புளியங்குடி அல் அமீன் நன்றியுரை ஆற்றினார்.
இனி வரும் நாட்களில் பல்வேறு பகுதிகளில் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!