Uncategorizedதமிழகம்

மதுரையில் கணவனால் கைவிடப்பட்டோர் சான்றிதழ் கொடுக்க 350 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி.வீடியோ – ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்

174views
மதுரை சிவகங்கை சாலையில் மேலமடை கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் செயல்பட்டு வருகிறது இங்கு கோமதிபுரம், சீமான் நகர், மேலமடை, யாகப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
யகப்பா நகர் பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் தனது கணவரால் கைவிடப்பட்டோர் பென்ஷன் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற சான்றிதழ் வாங்குவதற்காக விண்ணப்பித்து இருந்தார்.
கடந்த ஒரு மாதமாக கிராம நிர்வாக அலுவலகத்து நடையாய் நடந்தும் சான்றிதழ் கிடைக்காததால், தன்னார்வலர் இளைஞர் ஒருவரின் உதவியுடன் கிராம நிர்வாக பெண் அதிகாரி ரமணியிடம் சான்றிதழ் கேட்டு குறித்த போதுஅதற்கு லஞ்சமாக ஆயிரம் ரூபாய் கேட்டதாக தெரிய வருகிறது.
முதல் தவணையாக 250 ரூபாயை ராம நிர்வாக அதிகாரி ரமணியிடம் கொடுத்தார். தலையாரி மலையான்டியிடம் 250 ரூபாய் கொடுத்து விட்டு செல்லுங்கள். விதவை சான்றிதழ் அடுத்த வாரத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார். அதை லஞ்சம் கொடுத்த தன்னார்வலர் வீடியோவாக பதிவு செய்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்துகிராம நிர்வாக அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது தலையாரி மூன்று மாடி வீடு கட்டி உள்ளார். அவரும் தான் வாங்குகிறார் என பேசியதும், வீரபளத்தில் இருந்த மற்றொரு தலையாரி லஞ்சம் வாங்குவதில் தனக்கு ஒரு பைசா கூட தர மாட்டார் தன்னை ஒதுக்கி வைத்துள்ளார் என்று கூறுவது போன்ற ஆடியோவும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!