தமிழகம்

எடப்பாடி பழனிச்சாமி கார் ஓட்டுனர் கூட எங்கள் அணிக்கு வருவது நிச்சயம். திருப்பத்தூரில் அதிமுக ஓபிஎஸ் அணியின் கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் பேட்டி

228views
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஓ பன்னீர்செல்வம் அணியின் கழக கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் இவ்வாறு கூறினார்.
மேலும், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு உட்பட அனைத்து முன்னாள் அமைச்சர்களும் எங்கள் அணிக்கு வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்த மருது அழகுராஜ், முன்னாள் அமைச்சர்கள் எங்கள் அணிக்கு வர காரணத்தை எதிர்நோக்கி உள்ளனர் என்றும், உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது தீர்ப்பு வந்துவிட்டால் அது நடந்து விடும் என்றும் தெரிவித்தார்.
அதிமுகவில் தொண்டர் புரட்சி தொடங்கிவிட்டதாகவும்,அது நிச்சயம் எடப்பாடி பழனிச்சாமி அணியை வீழ்த்தும் என்றவர், ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் நேர்மையான கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர் என்றும், கூடிய விரைவில் பணத்திற்கு தலையாட்டாத நேர்மையான நிர்வாகிகளுடைய பொதுக்குழுகூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
செய்தியாளர்: சந்தோஷ் சிவம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!