தமிழகம்

காட்பாடி அடுத்த மேல்பாடியில் ஐயப்ப சுவாமியின் திருவிளக்குபூஜை

190views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்பாடியில் உள்ள ஸ்ரீ சோமநாதீஸ்வரர்கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீ மணிகண்ட பக்த சபாவின் சார்பில் 25-ம் ஆண்டு திருவிளக்குபூஜை நடைபெற்றது.
இதில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் வேலூர் கிழக்கு மாவட்ட முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் வி.ராமு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். சோளிங்கர் முன்னாள் ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.ஆனந்தன், மேல்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், பிரதிநிதி கிருபானந்தம், மாநகர மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி துணை செயலாளர் அமர்நாத், கல்புதூர் ஜெயவேல், காங்கேயநல்லூர் ராசு, தினேஷ்குமார், குகையநல்லூர் குமரவேல், சரவணன், செம்ராயநல்லூர் ஸ்ரீராம்லு, ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஸ்ரீ மணிகண்ட பக்த சபா சார்பில் விஜய் ஆனந்த், சிவக்குமார், சுபாஷ்சந்திரபோஸ், ஓம் கணேஷ், குருசாமி சசிகுமார், வெங்கடேசன், விநாயகம், பாலகிருஷ்ணன் ஆகியோர் பூஜை ஏற்பாட்டை செய்து இருந்தனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!