தமிழகத்தில்.நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் – மதுரையில் அதிமுக தற்காலிக அவைதலைவர் தமிழ் மகன் உசேன் பேட்டி
211views
தமிழகத்தில் அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் உள்ள 75 தர்காக்களில் அதிமுகவின் தற்காலிக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள தற்காக்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக மதுரைமேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவேடகம் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம்.கூறும் போது தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் நடத்த இறைவன் அருள் புரிய வேண்டும்.






