தமிழகம்

அழகப்பா பல்கலை., கல்லூரி இடையே செஸ் போட்டி

117views
அழகப்பா பல்கலையில் இணைப்பு பெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான செஸ் போட்டி, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குஞ்சார்வலசை ராஜா கலை, அறிவியல் கல்லூரி வளாக உள்ளரங்கில் நடந்தது. ஆடவர், மகளிர் பிரிவுகளில் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கலந்து கொண்டன.
போட்டியை கல்லூரி செயலாளர் டாக்டர் தில்லை ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.  ஆடவர் பிரிவில் பரமக்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரி, அழகப்பா கலை, அறிவியல் கல்லூரி முதல், இரண்டு இடம் பிடித்தன. மகளிர் பிரிவில் அழகப்பா கலை, அறிவியல் கல்லூரி, இளையான்குடி டாக்டர் ஜாகிர் ஹுசேன் கலை, அறிவியல் கல்லூரி முதல், இரண்டு இடம் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு ராஜா குழும நிறுவனரும், மண்டபம் பேரூராட்சி சேர்மனுமாகிய சேவா ரத்னா டி.ராஜா, டிரஸ்டி ஜெயந்தி ராஜா ஆகியோர் பரிசு கோப்பை வழங்கினர். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் வரதராஜ்குமார் செய்தார்.
நிருபர் : காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!