மழைநீர் பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு; மேயர் முன்பு அதிமுக கவுன்சிலர் கொந்தளிப்பு – மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு
242views
மதுரை மாநகராட்சி வார்டு 2-ல் உள்ள கூடல்நகர் – சொக்கலிங்கம் நகர் பகுதியில் மழை பாதிப்பால் சேதமடைந்த சாலை பள்ளத்தில் விழுந்து ரமேஷ் என்பவர் நேற்றிரவு உயிரிழந்து உள்ளார். மேலும் அப்பகுதிக்கு அவசரகால ஊர்தி கூட செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது இதை கண்ட பகுதி மற்றும் கூடல் நகர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர் போலீசார் வந்து சமாதானம் செய்து பொதுமக்களை கலந்து செய்த சிவவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாமன்ற கூட்டத்தில், சம்பந்தப்பட்ட வார்டின் அதிமுக கவுன்சிலர் அமுதா, மன்ற கூடத்தின் நடுவே வந்து நின்று சாலை சேதமடைந்ததற்கு கண்டனம் தெரிவித்து பேசினார். அவரை மண்டலம் 2-ன் தலைவர் சரவண புவனேஸ்வரி மற்றும் மேயர் சமாதானம் செய்து அமர வைத்தனர்.
இதனால் மாமன்ற கூட்டத்தில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் : வி. காளமேகம் மதுரை மாவட்டம்