உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் மைராஜ் அகமது கான் தங்கம் வென்று வரலாற்று சாதனை
துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை தொடர் தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்துவருகிறது. ஆடவர் ஸ்கீட் பிரிவின் ஃபைனலில் இந்தியாவை சேர்ந்த மைராஜ் அகமது கான் அபாரமாக விளையாடினார்.
46 வயதான இந்தியாவின் மைராஜ் அகமது கான், 40 ஷாட்கள் கொண்ட ஃபைனலில் 37 முறை மிகச்சரியாக சுட்டார். 40க்கு 37 புள்ளிகளை பெற்று தங்கம் வென்றார் மைராஜ் கான். உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் ஸ்கீட் பிரிவில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் மைராஜ் கான்.

இந்த தொடரில் இதுவரை இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி மற்றும்3 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றுள்ளது.