திமுகவை சேர்ந்த ட்விட்டர் பயனாளிகள், அரசு நிகழ்ச்சிகளும், வீட்டில் நடைபெறும் சடங்குகளும் ஒன்றாகுமா என்று கார்த்தி சிதம்பரத்திடம் எதிர்க்கேள்வி கேட்டுள்ளார்கள்.
அரசு விழாவின்போது பூஜை நிகழ்ச்சியை தர்மபுரி எம்.பி. செந்தில் குமார் தடுத்து நிறுத்திய நிலையில், அவரது இந்த நடவடிக்கை தேவையற்றது என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஆலாபுரத்தில், ஏரி சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இதையொட்டி, துறை சார்ந்த நீர்வள ஆதார அலுவலர்கள் பணியை துவங்குவதற்காக பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்தனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட தர்மபுரி திமுக எம்.பி. செந்தில்குமார், பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததுடன் பூஜைக்கான ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளை கடுமையாக திட்டினார்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: உறவினர்கள் கல்வீச்சு… போலீசார் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு
அரசு விழாவில் இந்து மத பூஜை எதற்காக என்று கேள்வி எழுப்பிய அவர், கிறிஸ்தவ, இஸ்லாமிய சம்பிரதாயங்களை செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பி அதிகாரிகளை கடிந்துகொண்டார். இதுதொடர்பான வீடியோ ட்விட்டரில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வீடியோவுக்கு சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அளித்துள்ள பதிலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
குஜராத் அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டினார் அகமது படேல்.. நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த சிறப்பு விசாரணைக் குழு
கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டில், ‘இது முற்றிலுமாக தேவையற்ற செயல். இது போன்ற நிகழ்ச்சி இல்லாமல் உங்கள் (திமுக) கட்சி உறுப்பினர் ஒருவரின் இல்லத்தில் திருமணம், புதுமனை புகுவிழா நடந்துள்ளதா? மக்கள் தங்களுக்கு வாக்களிப்பதால், அனைத்து சடங்குகளையும் மறுப்பதாக திராவிட அமைப்புகளின் தலைவர்கள் எண்ணிக் கொள்கின்றனர்.” என்று கூறியுள்ளார்.
இதற்கு திமுகவை சேர்ந்த ட்விட்டர் பயனாளிகள், அரசு நிகழ்ச்சிகளும், வீட்டில் நடைபெறும் சடங்குகளும் ஒன்றாகுமா என்று கார்த்தி சிதம்பரத்திடம் எதிர்க்கேள்வி கேட்டுள்ளார்கள்.மொத்தத்தில் இந்த விவகாரம் இன்னும் சில நாட்களுக்கு பரபரப்பை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.