இந்தியா

கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

66views

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்கவில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின்போது, அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டதாக தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது.

இதற்கு மத்திய அரசு சார்பாக சொலிசிடர் ஜெனரல், துஷார் மேத்தா விளக்கம் அளித்தார். அதாவது, 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் ஆனால் அது கட்டாயமல்ல என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு என அவர் கூறினார். முன்னதாக தடுப்பூசி செலுத்தாதவர்களாலேயே, கொரோனா உருமாற்றம் அடைவதாக தமிழக அரசு கூறியிருந்தது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!