தென் கொரியா, பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் துணை திரிபான பிஏ2 என்ற வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிர சுகாதார சேவைகள் முன்னாள் இயக்குநரும் மாநில அரசின் தொழில்நுட்ப ஆலோசகருமான டாக்டர் சுபாஷ் சாலுங்கே கூறும்போது, ‘உலகின் மற்ற நாடுகளில் நடந்தது போல் இந்தி யாவில் கரோனா நான்காவது அலை விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நாம் பாதுகாப்பை குறைத்துக் கொள்ள முடியாது. நான்காவது அலை பற்றி நமக்கு தெரியாத ஒரே விஷயம் அது எப்போது வரும். எவ்வளவு கடுமையானதாக இருக்கும் என்பது மட்டுமே’ என எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் முதன்முதலில் ஒமிக்ரான் பரவிய இடங்களில் மும்பையும் ஒன்றாகும். மகாராஷ் டிர அரசில் கரோனா பணிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் டாக்டர் ஷஷாங்க் ஜோஷி கூறும்போது, ‘இந்தியாவில் புதிய கரோனா அலைக்கான உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை. எனவே முகக்கவசம் அணிவதை நாம் நிறுத்தாமல் இருந்தாலும் கூட கவலைக்குரிய புதிய வைரஸ் வெளிப்படும் வரை நாம் பயப்படுவதற்கு எதுவும் இல்லை” என்றார்.