இந்தியா

4 முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கம்

74views

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ரயில்களில் பயணிகளின் தேவைகளை பொறுத்து மட்டுமே ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது.

தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் முன்பு போல முன்பதிவில்லாத பெட்டிகளை இணைக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 அல்லது 5 பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். கொரோனா காலத்தில் இந்த முன்பதிவில்லாத பெட்டிகள் நீக்கப்பட்டு எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிப்பவர்கள் அனைவரும் முன்பதிவு செய்திட வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தற்போது கொரோனாவிற்கு முந்தைய காலத்தில் அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகளை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா காலக்கட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி-புதுச்சேரி (வண்டி எண்:16111) இடையே காலை 4.20 மணிக்கும், மறுமார்க்கமாக புதுச்சேரி-திருப்பதி(வண்டி எண்: 16112) இடையே மதியம் 2.55 மணிக்கும் புறப்படும்.

சூலூர்பேட்டை-நெல்லூர் (வண்டி எண்: 06747) இடையே மதியம் 3.50 மணிக்கும், மறுமார்க்கமாக நெல்லூர்-சூலூர்பேட்டை(வண்டி எண்: 06748) இடையே மாலை 6.50 மணிக்கும்,

திருவனந்தபுரம் சென்டிரல்-நாகர்கோவில்(வண்டி எண்: 06433) இடையே காலை 6.50 மணிக்கும், மறுமார்க்கமாக நாகர்கோவில்-திருவனந்தபுரம் சென்டிரல்(வண்டி எண்: 06428) இடையே மாலை 6.20 மணிக்கும்

மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை(வண்டி எண்: 06743) இடையே மதியம் 1.15 மணிக்கும், மறுமார்க்கமாக சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட்(வண்டி எண்: 06744) இடையே இரவு 8.45 மணிக்கும் புறப்படும்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!