விளையாட்டு

பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஸ்வியடெக், சிமோனா

69views

பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் விளையாட ஸ்வியடெக், சிமானோ ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர். அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் நடக்கும் இந்தப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் போலாந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்(20வயது, 4வது ரேங்க்), அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ்(27வயது, 29வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதிரடியாக விளையாடிய ஸ்வியடெக்  56நிமிடங்களிலேயே 6-1, 6-0 என நேர் செட்களில் மேடிசனை வென்று அரையிறுதிக்கு தகுதிப் பெற்றார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹலேப்(30வயது, 26வது ரேங்க்), குரேஷியா வீராங்கனை பெட்ரா மார்டிக்(31வயது, 79வது ரேங்க்) ஆகியோர் விளையாடினர். அதில்  சிமோனா 53நிமிடங்களிலேயே 6-1, 6-1 என நேர் செட்களில் பெட்ராவை அதிரடியாக வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

காலிறுதியில் நடால்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு  முந்தைய சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால்(35வயது, 4வது ரேங்க்) 2 மணி 11 நிமிடங்கள் போராடி 7-6(6-3), 7-6(7-5) என நேர் செட்களில் அமெரிக்க வீரர் ரெய்லி ஒபெல்காவை(24வயது, 17வது ரேங்க்) வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அதேபோல்  பிரிட்டன் வீரர் கேமரன் நோரி(26வயது, 12வது ரேங்க்), ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸ்(18வயது, 19வது ரேங்க்), ஆஸ்திரேலியா வீரர் நிக் கியர்ஜியோஸ்(26வயது, 137வது ரேங்க்), செர்பியா வீரர் மியோமிர் கெமனோவிச்(22வயது, 61வது ரேங்க்) ஆகியோரும் காலிறுதியில் விளையாட உள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!