இந்தியா

பஞ்சாப், உத்தராகண்ட் மாநிலங்களில் முதல்வர்கள் உட்பட முக்கிய தலைவர்கள் தோல்வி

67views

ஐந்து மாநில தேர்தலில் முதல்வர்கள் உட்பட முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவி உள்ளனர்.

அமரீந்தர் சிங்: பஞ்சாப் முன்னாள் முதல்வரும் காங்கிரசில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டவருமான அமரீந்தர் சிங் பாட்டியாலா தொகுதியில் தோல்வி அடைந்தார். ஆம் ஆத்மியின் அஜித் பால் சிங் கோலியிடம் இவர் தோல்வியடைந்தார்.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தனது சொந்த தொகுதியான சம்கார் சாஹிப், மற்றும் பர்னாலா மாவட்டம் பாதார் என 2 தொகுதிகளிலும் அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளார்.

உத்தராகண்ட்டில் பாஜக வெற்றி பெற்றாலும், கதிமா தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர கப்ரியிடம் தோல்வியடைந்தார்.

உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மோஹன் சிங் ராவத் வெற்றி பெற்றார்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் (கிழக்கு) தொகுதியில் தோல்வியடைந்தார். ஆம் ஆத்மி வேட்பாளர் ஜீவன் ஜோத் கவுரிடம் இவர் தோல்வியடைந்தார்.

பஞ்சாபில் சிரோமணி அகாலிதள தலைவர் சுக்பிர் சிங் பாதல், ஜலாலாபாத் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஜக்தீப் கம்போஜிடம் தோல்வியடைந்தார். பஞ்சாப் மக் களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்பதாக சுக்பிர் உட்பட அனைவரும் கூறியுள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!